;
Athirady Tamil News

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் – 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள்

0

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக வசம் உள்ளது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பிரதேசபை தேர்தல் என்பது கிராம மட்டத்திலேயே உள்ள விடயங்களை கையாள்வதற்கு உரிய தேர்தலாகும் எனவே மக்கள் கிராமத்திலே செல்வாக்குரியவர்களுக்கு வாக்களிப்பார்கள் இது நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்நிலையில் எமது வேட்பு மனுக்கள் 09 சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.