ப்ரோக்கோலி சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சத்தான காய்கறிகளில் ஒன்றாக ப்ரோக்கோலி இருந்து வருகிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நன்மைகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
ஆன்டி-ஏஜிங் பண்புகள்
வயதாவதற்கான ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்க ப்ரோக்கோலி உதவும். இந்த காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையாக அதே சமயம் உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சருமத்திற்கு ஈரப்பதனை தரும்
ப்ரோக்கோலியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், அது சருமத்தின் ஹைட்ரேஷனை பராமரிக்க உதவுகிறது. மேலும் குறிப்பாக இதில் வைட்டமின்கள் ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன, இவை சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு, சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
முகப்பருக்களை தடுக்கிறது
ப்ரோக்கோலியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் முகப்பரு ஏற்படுவதை குறைக்கின்றன. இந்த சத்தான காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஜிங்க், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன, அரிப்பு, எரிச்சல் மற்றும் பிரேக்கவுட்ஸ்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.
சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
வெளில அதிகமாக இருக்கும் கோடை சீசனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களால் நம் சருமம் எளிதில் பாதிக்கப்படலாம், இது ஸ்கின் டேன் மற்றும் சேதத்தை ஏற்படுத்தலாம். ப்ரோக்கோலியில் காணப்படும் நன்மைகலை அளிக்கும் இயறக்கை பொருட்கள் நம் சருமத்தை சூரியஒளி ஏற்படுத்தும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. தவிர வயதாகும் அறிகுறிகள், சன்பர்ன் மேலும் தோல் புற்றுநோயின் அபாயத்தை கூட குறைக்கின்றன.
நேச்சுரல் க்ளென்சர்
ப்ரோக்கோலி நம் உடல் மற்றும் சருமத்தை இயற்கையாக சுத்தப்படுத்துகிறது, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது, இது சரும ஆரோக்கியத்தில் நேரடியாக எதிரொலிக்கிறது. ஆம், செரிமான அமைப்பு நன்கு செயல்பட்டால் பருக்கள், சுருக்கங்கள் மற்றும் சருமம் மந்ததன்மையுடன் இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.