;
Athirady Tamil News

21 வயது பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு; வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி

0

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களுடன் வந்த இருவர் இந்த கடத்தலை செய்துள்ளனர்.

தனது பணி நேரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை சந்தேக நபர்கள் பெண்ணை கடத்துவதற்கு முன்பு அவரது கணவரை துரத்திச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.