லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்றி விநியோகம்

இலங்கையில் நாடளாவிய ரீதியாக லாப்ஸ் எரிவாயு எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை எந்தவொரு பகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு குறித்த நிறுவனம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.