கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை குழுவினரும் இணைந்து முன்னெடுத்த உலக நாடக நாள் நிகழ்வுகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி ஆசிரியர் மன்றமும் செம்முகம் அரங்காற்றுகை குழுவினரும் இணைந்து முன்னெடுத்த உலக நாடக நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செம்முகம் அரங்காற்றுகை குழுவின் இயக்குனர் க. சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
விரிவுரையாளர் ஜீவாஜினி கேசவன் கற்றல் கற்பித்தலில் அரங்கின் வகிபங்கு என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார்
தொடர்ந்து, செம்முகம் ஆற்றுகை குழுவினர் வழங்கிய எங்கே எங்கே குடை எங்கே என்ற சிறுவர் நாடகம் , புதினமோ புதினம் என்ற பொம்மலாட்டம் , தேவை என்ற சமூக நாடகம் என்பன மேடையேற்றப்பட்டன.
நிகழ்வின் போது தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க. தணிகாசலம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை நாடக பாட விரிவுரையாளர் க.இ. கமலநாதன் சிறுப்பிட்டி அ.த.க. பாடசாலை அதிபர் யுகேஸ் மற்றும் ஆசிரிய மாணவர்களான தி. கௌசியா சு. கமலினி , தே. கீற்றா ஆகியோர் ஆற்றுகை செய்யப்பட்ட நாடகங்கள் பற்றிய கருத்துரைகளை வழங்கினர்.