பால் ஏற்றிச்சென்ற பவுசருடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

அவிசாவளை – கண்டி பிரதான வீதியில் அங்குருவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று 25) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும் பால் ஏற்றிச்சென்ற பவுசரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் த மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.