கால்நடை வைத்திய நடமாடும் சேவை

கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று யாழ்.அனலைதீவில் இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை கால்நடை வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த சேவை முன்னெடுக்கப்பட்டது.
இன்றையதின் ஒரு நாள் முழுவதுமாக ஊர்காவற்றுறை பிரதேச அரசாங்க கால்நடை வைத்தியர்
மாகாலிங்கம் முரளிதாஸ் தலைமையில் இந்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.
நடமாடும் கால்நடை வைத்திய சேவாயினுடாக, கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல், கால்நடை மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான நோய் சிகிச்சைகள், நாய்களுகான இலவச விசர் நோய் தடுப்பூசி, கால்நடைகளுக்கான இலவச நோய் தடுப்பூசி, கோழிகளுக்கான இலவச நோய் சிகிச்சைகளும் நோய் தடுப்பூசிகளும், கால்நடை மற்றும் கோழிப்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பண்ணை விலங்கு தீவனம் மற்றும் உள்ளீடுகள் வழங்கலும், பண்ணை விலங்கு பரிபாலனம் மற்றும் நீடித்து நிலைபெறன பண்ணை முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சிநெறி ஆகியவை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.