பணத்தைக் கொண்டு சுவிட்சர்லாந்துக்குள் குவிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்கள்

பணக்கார அமெரிக்கர்கள், பில்லியன் கணக்கில் டொலர்களைக் கொண்டுவந்து சுவிட்சர்லாந்தில் குவித்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து பக்கம் திரும்பியுள்ள அமெரிக்கர்கள்
அமெரிக்க பணக்காரர்கள் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்துவருகிறார்கள்.
பெரும்பாலான வங்கிகள் இதுகுறித்து மௌனம் காக்க, Vontobel வங்கி மட்டும், அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்தின்மீது ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தங்கள் பணத்தை முதலீடு செய்ய சுவிட்சர்லாந்து பாதுகாப்பான இடம் என அமெரிக்கர்கள் நம்புவதாலும், சுவிஸ் கரன்சி நிலையானது என்பதை அறிந்துள்ளதாலும் சுவிட்சர்லாந்தின் மீது அவர்கள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.