காஸாவில் இஸ்ரேலின் இரகசிய நடவடிக்கைகள்! புல் கூட முளைக்காத.,கந்தக பூமியாக மாறிய அவலம்

பாலஸ்தீனத்தை சிதைக்கும்படியான இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் பெரும்பான்மையான நாடுகள் இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்னைக்கு இரண்டு தேசத் தீர்வை வழங்குவது பற்றித்தான் அதிகமாக பேசி வருகின்றன.
வளைகுடா பிரச்சனைக்கு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு தேசங்களின் தீர்வு ஒன்றுதான் நிரந்தர சமாதானத்திற்கான வழி என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
ஆனால், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இந்த எண்ணம் இருக்கிறதா என்றால் உடனடியாக “இல்லை” என்று பதில் வழங்கிவிட முடியும்.
ஏனென்றால் இஸ்ரேல் ஏராளமான இரகசியத் திட்டங்களை முன்நகர்த்திக் கொண்டிருக்கிறது. காஸாவின் நிலம் என்பது தற்போது மனிதர்கள் இனி வாழவே முடியாத நிலமாக மாற்றப்பட்டு வருகிறது.
ஹமாஸ் பணயக்கைதிகளை சுரங்கங்களில் மறைத்திருந்ததும், பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் என அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டதும், சர்வதேச மட்டத்தில் காஸா தாக்கும் நியாயத்தை இஸ்ரேலுக்கு வழங்கியிருந்தது.