சிறார்களுக்கு அச்சுறுத்தல்… தண்டனையிலிருந்து தப்பியோடிய நபர்: பிரித்தானியாவில் சம்பவம்

சிறார் துஷ்பிரயோக வழக்கில் சிக்கி, தண்டனை அறிவிக்கப்பட்ட நபர், தற்போது தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறார் ஆர்வலர் குழு
குறித்த நபர் மீது கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான நலிகா ரணசிங்க என்பவரே சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இளம் வயது சிறுமி ஒருவருடன் ரணசிங்க 1200 குறுந்தகவல்களை பரிமாற்றம் செய்துள்ளார். 2023 பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவத்தில், சிறார் ஆர்வலர் குழு ஒன்று திட்டமிட்டு நடத்திய நடவடிக்கையா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இணையத்தில் அறிமுகமான அந்தச் சிறுமி தமக்கு 14 வயது என குறிப்பிட்டும், ரணசிங்க அவருடன் அருவருப்பாக உரையாடியதும், தொடர்புடைய சிறுமியின் 12 வயது உறவினருடன் உடல் ரீதியான நடவடிக்கைகளுக்கு ரணசிங்க தூண்டியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.
அந்த சிறுமியுடன் சுமார் 1200 குறுந்தகவல்களை ரணசிங்க பரிமாற்றம் செய்துள்ள நிலையில், சிறார்கள் ஆதரவு குழு ரணசிங்காவின் குடியிருப்புக்கே நேரிடையாக சென்றுள்ளது.
தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் அவரை கைது செய்தனர். 14 வயது சிறுமியுடன் அருவருப்பாக உரையாடியதும், குறுந்தகவல் அனுப்பியதும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், தாம் உரையாடியது ஆண் ஒருவருடன் என்றும் தம்மிடம் உரையாடுவது 14 வயது சிறுமி என அறிந்திருக்கவில்லை என்றும் பொலிசாரிடம் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சிறார்களுக்கு அச்சுறுத்தல்
நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட ரணசிங்க, மார்ச் 20 வியாழன் அன்று தண்டனை அறிவிக்கும் நாளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் கிரவுன் நீதிமன்றத்தால் அவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிணையில் இருக்கும் நபர் இதுவரை நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை என்பதால்,
சிறார்களுக்கு அவரால் அச்சுறுத்தல் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலிகா ரணசிங்க தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.