அறிகுறிகளைப் பார்க்க வேண்டும்… உலகப்போர் தொடர்பில் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை

இந்த ஆண்டில் ஏற்கனவே நிகழ்ந்துள்ள நிகழ்வுகளால் தூண்டப்பட்டு, ஒருகட்டத்தில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
உலகளாவிய அரசியல் முறை
பிரேசில் நாட்டவரான அதோஸ் சலோமே ஏற்கனவே உலக நாடுகளை மொத்தம் முடக்கிப் போட்ட கோவிட் பெருந்தொற்று குறித்தும், பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் தொடர்பிலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்தும் தமது கணிப்பை வெளியிட்டு எச்சரித்திருந்தார்.
ஆனால் தற்போது சமீபத்திய மாதங்களில் ஒரு ஆபத்தான உலகளாவிய அரசியல் முறை வெளிப்பட்டுள்ளதாக சலோமே கருதுகிறார். 38 வயதான சலோமே தெரிவிக்கையில், தாம் ஒரு ஆபத்தான உலகளாவிய நெருக்கடியை தற்போது உணர்வதாகவும், தென்படும் அறிகுறிகள் மீது கவனம் செலுத்துவது நம் கையில்தான் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
உலகளவில் தனித்தனியாக நடந்த சில அரசியல் நகர்வுகளில் தொடர்பிருப்பதை கவனித்துள்ளதாகவும் சலோமே எச்சரித்துள்ளார். ஜனவரி மாதம் லாத்வியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையே கடலுக்கடியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிளில் ஏற்பட்ட சேதத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது சதிவேலையாக இருக்கும் என ஸ்வீடன் அதிகாரிகளை விசாரணைக்குத் தூண்டியதே மோதல் நெருங்கியுள்ளதன் சான்று என சலோமே தெரிவித்துள்ளார்.
பார்வைக்குப் புலப்படாத போர் ஒன்று பால்டிக் கடலில் வெடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சலோமே, 2023ல் ஃபைபர் ஆப்டிக் கேபிள் சேதப்படுத்தப்பட்டு, அதனால் பின்லாந்து முழுவதும் தகவல் தொடர்பு அமைப்புகள் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமான மோதல்களுக்கு
இந்த விவகாரத்தில் ரஷ்ய எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை பின்லாந்து பொலிசார் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற தாக்குதல்கள் இனி தொடரும் என குறிப்பிட்டுள்ள சலோமே, இதுவே அப்பகுதியில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க நேட்டோவை தூண்டியது என்பதுடன், முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் அவசரகால நடைமுறைகளை உருவாக்க வழிவகுத்துள்ளது என்றார்.
பால்டிக் கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலே, 2023ல் முக்கியமான மோதல்களுக்கு காரணமாக அமைந்தது என்கிறார் சலோமே. தென் சீனக் கடலில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றும் சலோமே கணித்துள்ளார்.
பெரும் போர்கள் அனைத்தும் ஒரு சின்ன நிகழ்வுகளில் இருந்தே தொடங்கியது என்பதை வரலாறு ஏற்கனவே நமக்குக் காட்டுகிறது. ஒரு படுகொலைச் சம்பவம் முதல் உலகப் போரையும் போலந்து மீதான படையெடுப்பு இரண்டாம் உலகப் போரையும் தூண்டியது.
பால்டிக் கடலில் ஃபைபர் ஆப்டிக் கேபிளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் என்பது இராணுவத் தாக்குதலைப் போலவே பேரழிவு தரும் தாக்கங்களையும் ஏற்படுத்தும்.
உண்மையில் இது சதி வேலை என்றால், நேட்டோ அமைப்பின் பதில் என்னவாக இருக்கும்? சாத்தியமான முறையான குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும்? உள்லிட்ட கேள்விகளையும் சலோமே முன்வைத்துள்ளார்