பரீட்சை நிறைவடைந்ததும் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததும் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மேற்பார்வையாளர்களிடம் ஆசி பெற்ற கையோடு பாடசாலை சூழலை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர்களை வணங்கி விடை பெற்றுள்ளனர்.
அது மட்டுமின்றி தான் பெற்ற பாடசாலையை மறவாது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப் படுத்தியதுடன் தான் கற்ற பாடசாலையை மாணவர்கள் விழுந்து வணங்கியமை குறிப்பிடத்தக்கது .