;
Athirady Tamil News

கேரளாவில் இந்திய உளவுத்துறை இளம் பெண் அதிகாரி சடலமாக மீட்பு

0

கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிகாரி சடலமாக மீட்பு
இந்திய மாநிலமான கேரளா, திருவனந்தபுரத்தில் இருக்கும் பெட்டா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இந்திய உளவுத்துறை அதிகாரியான மேகா (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை அதிகாரியான மேகா, பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியை சேர்ந்தவர். இவர், பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்துள்ளார்.

இவரது உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தானாகவே இவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

தண்டவாளத்தில் ஒரு பெண் குதிப்பதை கண்டதாக ரயில் லோகோ பைலட் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

இதில், தனது மகள் மேகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.