இனி தங்கத்தை பணமாக்க முடியாது – அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

தங்கத்தை பணமாக்கும் திட்டம்
தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை(GMS) கடந்த 15 செப்டம்பர் 2015 அன்று, இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தங்கம் இறக்குமதி செய்வதை குறைக்கும் நோக்கிலும், பயன்படுத்தப்படுத்தாத தங்கத்தை வங்கியில் வைத்து வட்டி பெரும் நோக்கத்திலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் குறுகிய கால வங்கி வைப்பு (1-3 ஆண்டுகள்), நடுத்தர கால அரசு வைப்பு (5-7 ஆண்டுகள்) மற்றும் நீண்ட கால அரசு வைப்பு (12-15 ஆண்டுகள்) என மூன்று காலகட்டங்களை கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், நவம்பர் 2024 வரை 31,164 கிலோ தங்கம் பணமாக்கப்பட்டுள்ளது. மொத்த வைப்புத்தொகையில், குறுகிய கால வைப்புத்தொகை 7,509 கிலோ, நீண்ட கால வைப்புத்தொகை 13,926 கிலோ மற்றும் இடைக்கால தங்க வைப்புத்தொகை 9,728 கிலோ ஆகும்.
திட்டத்தை நிறுத்த முடிவு
இந்நிலையில், மார்ச் 26, 2025 க்குப் பின்னர், நடுத்தர கால மற்றும் நீண்ட கால அரசு வைப்பு கூறுகள் நிறுத்தப்படும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டங்களில் ஏற்கனவே உள்ள வைப்புத்தொகைகள் அவற்றின் முதிர்வு காலம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளால் வழங்கப்படும் குறுகிய கால வங்கி வைப்புத்தொகை (STBD) வசதி, வங்கிகளின் விருப்பப்படி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் சந்தை நிலவரங்கள் மற்றும் திட்டத்தின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.