;
Athirady Tamil News

வரதட்சணை கேட்ட கணவர் – காவல்நிலையத்தில் வைத்து தாக்கிய குத்துசண்டை வீராங்கனை

0

காவல்நிலையத்தில் வைத்து கபடி வீரரான கணவரை, குத்துசண்டை வீராங்கனையான மனைவி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குத்துசண்டை வீராங்கனை
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த குத்து சண்டை வீராங்கனையான ஸ்வீட்டி பூரா, 2022 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப், 2023 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

அதேவேளையில், 2016 கபடி உலக சாம்பியன்ஷிப், 2018 ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பிடித்தவர் தீபக் நிவாஸ் ஹூடா.

இவர்கள் இருவருக்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

வரதட்சணை புகார்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், தனது கணவர் தீபக் ஹூடா மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னைத் தாக்கியதாக, பூரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், தீபக் ஹூடா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வருமாறு இரு தரப்பினருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தீபக் ஹூடா மற்றும் ஸ்வீட்டி பூரா இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் காவல்நிலையதிற்கு வந்துள்ளனர்.

கணவர் மீது தாக்குதல்
அப்பொழுது, காவல்துறை முன்னிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், தீபக் ஹூடா தனது மனைவி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஸ்வீட்டி பூரா, அனைவரின் முன்னைலையிலும் கணவரின் கழுத்தை பிடித்தபடி, கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கியுள்ளார்.

குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்த முயன்ற போதும், மீண்டும் கணவரை தாக்க முயன்றார்.

அதனையடுத்து, அங்கிருந்த காவல்துறையினரை அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர். ஸ்வீட்டி பூரா தனது கணவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.