;
Athirady Tamil News

யாழில். முதியவரின் சடலம் மீட்பு – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

0

யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டு , கோப்பாய் பொலிஸாரினால் யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

குறித்த வயோதிபர் , வீதியோரமாக நடந்து செல்வதும் , திடீரென வடிகாலுக்குள் விழுவதும் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

குறித்த வயோதிபருக்கு 70 தொடக்கம் 75 வயது மதிக்கலாம் எனவும் , சடலத்தை அடையாளம் காட்டினாலே , உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் , சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.