பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த சமகால நிலைப்பாடுகள் மற்றும் பெண்களின் நிலைபேறான வாழ்வாதாரம் குறித்த கற்றல் மற்றும் சிபாரிசுகள் தொடர்பான திறந்த வட்ட மேசை கலந்துரையாடல்

பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த சமகால நிலைப்பாடுகள் மற்றும் பெண்களின் நிலைபேறான வாழ்வாதாரம் குறித்த கற்றல்
மற்றும் சிபாரிசுகள் தொடர்பான திறந்த வட்ட மேசை கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள திருமண மண்டபத்தில்
நேற்று (26) இடம்பெற்றது.
இந்நிகழ்வை விழுது நிறுவனம் மற்றும் GIZ ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில் பெண்களின் வாழ்வாதார ரீதியான முன்னேற்றத்தை இனங்கண்டு கொண்டு தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் தொடர்
பிலும் பெண்கள் அரசியல் தளத்தில் பிரவேசிக்கக் கூடியவர்களாக தங்களது அறிவுத் திறன் மனப்பாங்குகளைக் கொண்டு எதிர்காலத்தில் வலுச்சேர்த்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வளவாளர்களால் தெளிவூட்டலும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வளவாளர்களாக
யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையர் சசீலன் இராஜேந்திரா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஆர். சுரேந்திரகுமாரன் உள்ளிட்ட துறைசார் வல்லுனர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.