இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல்; நால்வருக்கு விளக்கமறியல்

கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று(27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை மேற்படை சம்பவம் தொடர்பில் யோசித ராஜபக்க்ஷ மற்றும் அவரது மனைவியும் பொலிஸில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.