ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இன்று பிற்பகல் யாழ்.சாவகச்சேரி பகுதியில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், தற்போதய வேட்பாளருமாகிய செ.மயூரன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.