வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: சுவிஸ் நகரமொன்று சோதனை

சுவிஸ் நகரம் ஒன்று வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் விடயத்தை சோதனை முயற்சியாக துவங்க உள்ளது.
வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை
சுவிட்சர்லாந்தின் Basel நகரம், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் விடயம் வெற்றி பெறுமா என்பதை சோதனை முயற்சியாக செய்து பார்க்க முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பணித்தலங்களில் சாதாரணமாக ஒரு வாரம் என்பது 42 மணி நேரம் முதல் சில நேரங்களில் 45 மணி நேரம் வரையும் வேலை செய்வதாகும்.
நாளொன்றிற்கு ஒருவர் பொதுவாக காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வேலை செய்கிறார்.
இந்நிலையில், சில நாடுகளைப்போல, சுவிட்சர்லாந்தும், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்னும் விடயத்தை Basel நகரில் சோதனை முயற்சியாக செய்துபார்க்கத் திட்டமிட்டுவருகிறது.
நான்கு நாட்களே வேலை என்றாலும், வழக்கமாக கொடுக்கப்படும் முழு ஊதியமே வழங்கப்படும், அதில் எதுவும் குறைக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.