பரவி வரும் வதந்திகள்… புடின் விரைவில் இறந்துவிடுவார்: உக்ரைன் ஜனாதிபதி

புடின் விரைவில் உயிரிழந்துவிடுவார் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பரவி வரும் வதந்திகள்
புடினுடைய உடல் நல பாதிப்புகள் குறித்து ஏராளம் வதந்திகள் தொடர்ந்து பரவிவருகின்றன.
புடினுடைய முகம் வீங்கியிருப்பது, கை கால்கள் நடுக்கம், கட்டுப்பாடின்றி வளையும் கால்கள் ஆகிய விடயங்கள் புடினுடைய உடல் நலம் மோசமடைந்துவருவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.
புடின் விரைவில் இறந்துவிடுவார்
இப்படி ஏற்கனவே புடினுடைய உடல் நலம் தொடர்பில் செய்திகள் பரவிவரும் நிலையில், புடின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்த நிலையில், புடின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்க முயல்கிறார் என்று கூறினார்.
அதாவது, ஐரோப்பிய நாடான ஹங்கேரி ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதை சுட்டிக்காட்டித்தான், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்க புடின் முயல்கிறார் என்று கூறினார் ஜெலன்ஸ்கி.
ஆக, புடினுடைய பிரித்தாளும் சூழ்ச்சியால் கோபமடைந்துள்ள ஜெலன்ஸ்கி, புடின் விரைவில் இறந்துவிடுவார் என்றும், அது ஒரு உண்மை, விரைவில் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.