;
Athirady Tamil News

கடுமையான தோல்வியில் முடிந்த மஸ்கின் சர்ச்சை உத்தரவு: குழப்பத்தில் ஊழியர்கள்

0

அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்கள் எலோன் மஸ்கின் DOGEயிற்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்தது சர்ச்சையாகியுள்ளது.

சர்ச்சை உத்தரவு
எலோன் மஸ்கின் DOGE, அனைத்து கூட்டாட்சி ஊழியர்களும் தங்கள் சாதனைகளின் வாராந்திர பட்டியலை அனுப்ப வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய உத்தரவை வெளியிட்டது. ஆரம்பம் முதலே இதற்கு எதிரான கருத்துக்கள் ஊழியர்கள் இடையே நிலவின.

இந்நிலையில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் முந்தைய வாரத்தில் தாங்கள் சாதித்த 5 விடயங்களின் பட்டியலை அனுப்ப முயற்சித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்ததாக ABC செய்தி தெரிவித்துள்ளது. மேலும், பணியாளர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள அஞ்சல் பெட்டி (mailbox) நிரம்பியுள்ளதாகவும், இனி எந்த மின்னஞ்சல்களையும் பெற முடியாது என்றும் அவர்களுக்கு ஒரு செய்தி வந்தது.

அதில், ‘பெறுநரின் அஞ்சல் பெட்டி நிரம்பியுள்ளது. இப்போது செய்திகளை ஏற்க முடியாது. உங்கள் செய்தியை பின்னர் மீண்டும் அனுப்ப முயற்சிக்கவும் அல்லது பெறுநரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்’ என கூறப்பட்டுள்ளது.

IRS, சமூக பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் ஊழியர்களை இந்த தொழில்நுட்ப சிக்கல் பாதித்துள்ளது.

மின்னஞ்சல்களைப் புறக்கணிக்குமாறு
எனினும் சில நிறுவனத் தலைவர்கள், தங்கள் ஊழியர்களை தங்கள் அறிக்கைகளை வேறு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டி நோயம் ஆகியோர் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களைப் புறக்கணிக்குமாறு தங்கள் ஊழியர்களிடம் கூறினர்.

சில ஊழியர்கள் தங்கள் அறிக்கைகளில் DOGEஐ வெளிப்படையாக கேலி செய்வதாக ஊழியர் ஒருவர் கூறினார். அவர், ‘யாரும் இவற்றைப் படிப்பதாக நான் நினைக்கவில்லை’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.