250,000 பிரித்தானியர்களை வறுமையில் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம்

பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கங்கள் கடன் வாங்கும், அல்லது வரிகள் விதிக்கும்.
ஆனால், பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸோ, புரட்சிகர திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறார்.
250,000 பிரித்தானியர்களை வறுமையில் தள்ளும் திட்டம்
அதாவது, வரி விதிப்புகளுக்கு பதிலாக, அரசு பொதுமக்களுக்கு வழங்கிவரும் உதவிகளை குறைக்க அல்லது நிறுத்த திட்டமிட்டுள்ளார் ரேச்சல் ரீவ்ஸ்.
Personal Independence Payment (PIP) என்னும் அரசு உதவி, மருத்துவ உதவி முதலான பல உதவிகள் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ உள்ளன.
சேன்ஸலரின் திட்டத்தால் 50,000 சிறுவர் சிறுமியர் உட்பட, 250,000 பிரித்தானியர்கள் வறுமைக்குள்ளாக இருக்கிறார்கள்.
இதனால், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே கருத்துவேறுபாடுகள் உருவாகியுள்ளன.
ஆகவே, ரேச்சல் தனது திட்டத்தை நடைமுறைப்படுத்த முயலும்போது அவருக்கு எதிராக வாக்களிக்க இருப்பதாக லேபர் கட்சியினரே மிரட்டியுள்ளார்கள்.