கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார்.
பூனையை பார்த்து குழந்தை பயந்து ஓடியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குழந்தையின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சரிகா நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குழந்தை சரிகாவின் தந்தை காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரிடம் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.