குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன்.., மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

மனைவி வேறொரு நபர் ஒருவரை காதலிப்பது தெரிந்தும் அவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவர்.
காதலனுடன் திருமணம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் பப்லூ மற்றும் ராதிகா. இதில், தனது மனைவி ராதிகாவை அவரது காதலருக்கு திருமணம் செய்து வைக்க பப்லூ முடிவு செய்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் பப்லூவும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில், வேலை காரணமாக பப்லு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே தங்கினார். அப்போதுதான் ராதிகாவுக்கு கிராமத்தில் உள்ள வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவு குறித்து பப்லுவுக்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதனையறிந்த பப்லூ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மனைவின் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தார்.
முதலில் அவர்களின் திருமணத்தை நீதிமன்றத்தில் நடத்தி வைத்தார். பின்னர் உள்ளூர் கோவிலில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். அங்கு ராதிகாவும் அவரது காதலரும் கிராம மக்கள் முன்னிலையில் மாலைகள் மாற்றிக் கொண்டனர்.
மேலும், தான் குழந்தைகளை பார்த்துக் கொள்வதாகவும் பப்லூ கூறினார். அதற்கு ராதிகாவும் ஒப்புக்கொண்டார்.