;
Athirady Tamil News

பௌத்த தேரரின் கொடூர படுகொலை! விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்

0

அனுராதபுரம், எப்பாவல, பகுதியில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, குறித்த தேரர் கடைசியாக 23 ஆம் திகதி இரவு 8.29 மணிக்கு ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், துறவி மடத்தின் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ​​யாரோ ஒருவர் அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி முகத்தை வெட்டி, சிதைத்து, பின்னர் அவரது பிறப்புறுப்புகளை வெட்டி எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பௌத்த ஆலயம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட தேரரால் நிறுவப்பட்டது என்றும், மேலும் அவர் மட்டுமே அங்கு வசித்து வந்தள்ளதாகவும் விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம்

கிராமவாசிகளின் தகவலின்படி , “கொழும்பு பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தனர்., கிராமவாசிகளுக்கும் தேரருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.

ஒரு சில கிராமவாசிகளைத் தவிர வேறு யாரும் இந்த விகாரைக்கு சென்றதில்லை.

கடந்த 25 ஆம் திகதி மதியம் வேறொரு ஆலயத்தின் சேர்ந்த துறவி ஒருவர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்தபோது இந்தக் கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆலயத்தின் பொறுப்பாளர் ஒரு நாற்காலியில் இறந்து கிடந்தார்” என கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைகளின்படி, “தேரரின் உடல் கடுமையாக சிதைந்திருந்ததால், இந்தக் கொலை சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட தேரரின் தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது. அவரது பிறப்புறுப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது.

மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​கோயிலில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலாவ-எப்பாவல பிரதான வீதிக்கு அருகிலுள்ள வடிகாலில் வீசப்பட்ட நிலையில், தேரரின் அடையாள அட்டை உட்பட பல மதிப்புமிக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணை
தேரர் தனது பயணங்களுக்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கொலையாளி அல்லது கொலையாளிகளால் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு மருத்துவமனைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த இடத்தில் மூன்று ஜோடி காலணிகள் மற்றும் ஒரு கத்தி கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் அவை மேலதிக விசாரணைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொலையடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு தம்புத்தேகம பதில் நீதவான் சந்திரிகா கஹடபிட்டிய எப்பாவல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் நேரடி விசாரணையைத் தொடர்ந்து, இறந்த பிக்குவின் உடலை அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பி, பிரேத பரிசோதனை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியான தகவல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த பெண் சிறப்பு மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கொலை, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.