75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் சிக்கியது

சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பாணந்துறை பாலத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்தபோது, ஒரு பொலித்தீன் பையுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 870 கிராம் ஹஷீஷ் மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப்பொருட்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகக் தெரிவிக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என தெரிவித்த பொலிஸார் , கைதான சந்தேக நபரை தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.