4 வயது சிறுவனை பலியெடுத்த விபத்து

பாதுக்கை – கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பின்னவலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (27) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் பயணம்
லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.