;
Athirady Tamil News

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நாடுகள்: தாய்லாந்தில் விமான சேவை நிறுத்தம்!

0

தாய்லாந்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று பிற்பகலில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த நாடுகளில் உள்ள பல கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. இதனிடையே இரு நாடுகளிலும் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்ச்சியாக தாய்லாந்து, மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்ததாக தகவல்கள் வெளியுகியுள்ளன.

கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். எச்சரிக்கை மணி ஒலித்தாதல் சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். பெரிய பெரிய கட்டடங்கள் அப்பளம் போல் நொருங்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றது.

மியான்மரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. நிலைமையைச் சமாளிக்கத் தாய்லாந்து அமைச்சரவை அவசரக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த வாரம் பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம் ரத்தாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தாய்லாந்தில் விமானச் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 7.7 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும் தகவல்கள் காத்திருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.