நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அரசியல் கட்சி அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் சுமாா் 30 போ் காயமடைந்ததாகவும் அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் காவல்துறையினா் என்றும் அதிகாரிகள் கூறினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் நேபாள அரசா் ஞானேந்திரா் படத்துடன் உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் படத்தையும் எடுத்துவந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.