பெல்ஜியமில் பெண்களின் பானத்தில் போதை பொருள்: துஷ்பிரயோக வழக்கில் பார் மேலாளர்கள் கைது

பெல்ஜியம் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பார் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம் பாலியல் துஷ்பிரயோக வழக்கு
பெல்ஜியத்தில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பல பெண்களின் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தொடர் விசாரணையில் மூன்று பார் மேலாளர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு பெல்ஜியம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை விவரங்கள்
2021 டிசம்பர் முதல் 2024 டிசம்பர் வரை சுமார் 41 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பெண்களின் பானங்களில் கெட்டமைன் (Ketamine) போன்ற போதைப் பொருள் கலந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். வடமேற்கு பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ் நகரில் உள்ள பார்களில் நடந்துள்ள இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் கைது செய்யப்பட்ட பார் மேலாளர்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
கைது மற்றும் சட்ட நடவடிக்கை
மேற்கு பிளாண்டர்ஸ் பொது வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலப்பு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.