;
Athirady Tamil News

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

0

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொறுத்த திட்டமிட்டிருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பில் செக் நாட்டு அமைச்சர்களினால் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கான உத்தரவு உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டு முதலீடுகளை மறுஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட செக் குடியரசின் 2021 சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான நடவடிக்கைகளை, செக் அதிகாரிகள் பயன்படுத்தியது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கசிந்த ஆவணத்தின் அடிப்படையில், எம்போஸாட் நிறுவனத்தின் ஈடுபாடினால் செக் குடியரசின் நடவடிக்கைகளை உளவுப் பார்த்து அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆணையங்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செக் குடியரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான மாரெக் வொஷாலிக் கூறுகையில், சீனாவின் இந்த முதலீட்டினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் குறைவான அளவிலான தாக்கமே உள்ளது. ஆனால், இது குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறியுள்ளார்.

எனவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையினால் அக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்போஸாட்டின் 7.3 மீட்டர் அகலமுள்ள ஆன்டென்னா அகற்றப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.