தவெக பொதுக்குழு; இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவெக பொதுக்குழு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஜய்க்கு முழு அதிகாரம்
கட்சியை வழிநடத்துவது, கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், தவெக கட்சியில் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகளிருக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரு மொழி கொள்கைக்கு ஆதரவு
இரு மொழி கொள்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அரசாங்க ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும் என 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கூட்டணி, பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம் போன்றவை குறித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.