சாலையோரமாக மயங்கிச் சரிந்த நபர்: மருத்துவமனையில் அவர் தெரிவித்த திடுக் தகவல்

மும்பை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சாலையோரமாக நிலைகுலைந்து சரிய, பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
மருத்துவமனையில் அவர் கூறிய ஒரு தகவல் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் (Rakesh Khedekar, 36), மும்பை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று, புனேயில் காரில் சென்று கொண்டிருந்த ராகேஷ் திடீரென காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு மயங்கிச் சரிந்திருக்கிறார்.
பொலிசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராகேஷ், ஒரு திடுக்கிடவைக்கும் செய்தியைக் கூறியுள்ளார்.
ஆம், அவர் புதன்கிழமை இரவு, தன் மனைவியான கௌரியை (32) கொலை செய்து பெங்களூருவில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு சூட்கேசில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தன் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை அழைத்து இந்த தகவலை மொபைல் மூலம் ஏற்கனவே கூறியிருந்ததால் அந்த வீட்டின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பெங்களூரு பொலிசார் அவரது வீட்டை சோதனையிட, சூட்கேஸ் ஒன்றிற்குள் கௌரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக பூச்சி மருந்து குடித்துவிட்டு காரில் மும்பை நோக்கி புறப்பட்டுள்ளார் ராகேஷ்.
அதிரவைத்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.