மரண வீட்டில் அரசியல் நுழைந்ததால் களேபரம்; வீதியில் குவிந்த மக்கள்

கலல்கொடை, பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு மரண வீட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரண வீட்டில் இருவர் இடையே அரசியல் தொடர்பான விவாதம் ஏற்பட்டது.
இந்த விவாதம் தீவிரமாகி மோதலாக மாறியது. மோதல் மிகுந்ததால், மரண வீட்டில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து இரண்டு பிரிவாக பிளந்து ஒருவருக்கொருவர் தாக்கியுள்ளனர்.
பின்னர், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த மோதலில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.