AL பெறுபேறுகள் ; மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் ; பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலமாக க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பல தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் , க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான தகவல்களினால் மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.