;
Athirady Tamil News

யாழில். தடையின்றி மின்சாரம் என அமைச்சர் கூறி சில நிமிடத்தில் மின் தடை

0

யாழ்ப்பாணத்திற்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டமையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோதே குறித்த சம்பவம் பதிவானது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உரையாற்றிக் கொண்டு இருந்தபோதே மின்தடை ஏற்பட்டது.
இதனால் சிறுது நேரம் நிகழ்வில் தடங்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.

குறித்த நிகழ்வில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடித்துவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலித் சமரசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.