;
Athirady Tamil News

குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி உதவியுடன் இளைஞரை நரபலி கொடுத்த நபர்

0

பீஹாரில், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் இளைஞர் ஒருவரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாயமான இளைஞர்
பீஹாரிலுள்ள ஔரங்கபாதைச் சேர்ந்த யுகல் யாதவ் என்னும் இளைஞர் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவரைத் தேடிவந்துள்ளார்கள்.

அப்போது, Banger என்னும் கிராமத்தில் ஒரு இடத்தில் சாம்பலுக்குள் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த பகுதியில் யுகல் யாதவின் செருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடனடியாக, மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள் பொலிசார்.

மோப்ப நாய் ராமஷிஷ் ரிக்யாசன் என்னும் மந்திரவாதியின் வீட்டை அடையாளம் காட்ட, அந்த வீட்டிலிருந்த ராமஷிஷின் உறவினரான தர்மேந்திரா என்பவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நடந்த பயங்கரம்
விடயம் என்னவென்றால், சுதிர் பாஸ்வான் என்பவருக்கு குழந்தை இல்லை என்பதற்காக ராமஷிஷை நாடியுள்ளார்.

அவரது ஆலோசனையின்பேரில் அவரது உதவியாளரான தர்மேந்திரா, யுகல் யாதவைக் கடத்திவந்துள்ளார்.

யுகல் யாதவை நரபலி கொடுத்து, அவரது தலையை வெட்டி ஓரிடத்தில் வீசிவிட்டு, அவரது உடலை மந்திரம் செய்வதற்காக தீயில் எரித்துள்ளார்கள்.

தர்மேந்திரா கொடுத்த தகவலின்பேரில் யுகல் யாதவின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே ஒரு இளைஞரை நரபலி கொடுத்து, அவரது உடலை அதே பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் வீசியதையும் தர்மேந்திராவும் அவரது கூட்டாளிகள் சிலரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பொலிசார் சுதிர் பாஸ்வான், தர்மேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்துள்ளார்கள்.

அத்துடன், தலைமறைவாகிவிட்ட ராமஷிஷையும் பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.