யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில்( 24 மற்றும் 25 ம் திகதி ) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
வரணி மத்திய கல்லூரியில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார்.
மேலும் கொடிகாமம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடும் பயனாளி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியை, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் வரவேற்றதுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்றது.