ஆனையிறவு உப்புக்கு வந்த சோதனை!

இலங்கை அரச உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளத்தின் மேசை உப்பானது இனி “ரஜ சோல்ட்” எனும் வியாபார குறியீட்டின் கீழ் இலங்கை எங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிங்கள பெயர் சூட்டப்பட்ட பின்னராக அதனை ஆனையிறவு உப்பு எனும் பெயரிலேயே எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ஆனையிறவு உப்பு என தமிழிலும் அலிமங்கட லுணு என சிங்களத்திலும் எலிபன்ட்பாஸ் சால்ட் என ஆங்கிலத்திலும் விநியோகிக்கப்படுமென கூறப்படுகின்றது.