தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.