;
Athirady Tamil News

புடினை கொல்ல சதி? வெடித்து சிதறிய 3,57,000 டொலர் சொகுசு கார்.. அதிர்ச்சி வீடியோ

0

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கார் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்துச் சிதறிய கார்
விளாடிமிர் புடினின் Aurus Senat Limousine என்ற கார், மாஸ்கோ நகரில் FSB ரகசிய சேவை தலைமையகத்திற்கு அருகில் வெடித்துச் சிதறியது.

இந்த வாகனம் புடினின் சொத்து மேலாண்மைத் துறையைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்குள் யார் இருந்தார்கள் அல்லது திடீர் தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எரிந்த காட்சிகள்
எனினும், உயிரிழப்போ அல்லது காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,57,000 டொலர்கள் மதிப்புள்ள அந்த கார் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் புடினை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புடினின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் அணுசக்தி எதிர்வினையைத் தூண்டும் என கிரெம்ளின் எச்சரித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.