புதிய நீர் இணைப்பை பெற பொது மக்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

புதிதாகக் குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயற்றிட்டத்தினை நிகழ்நிலை ஊடாக முன்னெடுப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, WATERBOARD.LK என்ற வலைத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் ஊடாக அதற்கான விண்ணப்பங்களைப் பெறமுடியும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் புதிதாக நீர் இணைப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடி திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.