புதிய பொலிஸ் மா அதிபர் யார்..! வெளியான தகவல்

தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் பிரியந்த வீரசூரிய, இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக அரசின் உள்ளக தரப்புக்களில் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, பிரியந்த வீரசூரிய நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இருப்பினும், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஏற்கனவே ஏழு பேர் போட்டியிடும் நிலையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச வட்டாரங்கள்..
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேசபந்து தென்னகோனை அப்பதவியில் இருந்து நீக்கக் கோரி பிரேரணை ஒன்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,
மேலும், எதிர்வரும் ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதிகளில் இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.