;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கம் முன்னெடுத்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் திருக்குறள் போட்டிக்கான வட மாகாணம் தழுவிய பரிசளிப்பு விழாவும்

0

யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கம் முன்னெடுத்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் திருக்குறள் போட்டிக்கான வட மாகாணம் தழுவிய பரிசளிப்பு விழாவும் 30.03. 2025 ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களம் கனடா உலக ஒழுக்க நெறி கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்து ஆன்மீகப் பிரசாரகர் சங்க தலைவர் ஆசிரியர் க. கனகதுர்க்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சி ஸ்ரீசற்குணராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

நிகழ்வில் தென்கரணையூர் அமிர்த சிறீகாந்த குருக்கள் ஆசியுடையையும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரும் இந்து ஆன்மீக பிரசாரகர் கற்கை நெறி வளவாளரும் ஆகிய செந்தமிழ் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் வாழ்த்துரையையும் வழங்கினர்

நிகழ்வில் ஆன்ம விசாரம் என்ற இந்து சமய ஆன்மீக பிரசாரகர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு மலர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது இதன் அறிமுக உரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளரும் ஆன்மீக பிரசாரகர் கற்கை நெறி வளவாளருமாகிய கு பாலசண்முகன் நிகழ்த்தினார்

இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கத்தினால் நாடு தழுவிய நிலையில் திருக்குறள் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு இதன் பரிசளிப்பு விழாக்கள் கண்டி மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு நிறைவு நிகழ்வு வட மாகாண நிலையில்லான பரிசளிப்பு விழாவாக நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.