;
Athirady Tamil News

பிரம்மாண்ட எண்ணெய் வயலைக் கண்டுபிடித்துள்ள சீனா

0

சீனக்கடலில் பிரம்மாண்ட எண்ணெய் வயல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது சீனா.

பிரம்மாண்ட எண்ணெய் வயல்
சீனாவின் எண்ணெய் நிறுவனமான The China National Offshore Oil Corporation (CNOOC), தெற்கு சீனக்கடலில் 100 மில்லியன் டன் எண்ணெய் வயல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக இன்று சீன செய்தி நிறுவனமான Xinhua தெரிவித்துள்ளது.

Huizhou 19-6 எண்ணெய் வயல் என பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணெய் வயல், தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்திலுள்ள Shenzhen என்னுமிடத்திலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு சீனக்கடலில் அமைந்துள்ளது.

சோதனை முயற்சியாக எண்ணெய் வயலில் துளையிட்டபின், நாளொன்றிற்கு இந்த எண்ணெய் வயலிலிருந்து 413 பேரல் கச்சா எண்ணெயும், 68,000 கியூபிக் மீற்றர் இயற்கை எரிவாயுவும் கிடைப்பதாக Xinhua ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.