;
Athirady Tamil News

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக உயர்வு!

0

மியான்மரிலும் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துவிட்டதாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமென்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) பகல் 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 3-ஆவது நாளாக நேற்று முன்தினமும் (மார்ச் 30) நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த இயற்கை பேரிடர் உலகெங்கிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலுமொரு அதிர்ச்சி தகவலாக, சம்பவ நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரமலானையொட்டி பெருந்திரளாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்கள் சுமார் 700 பேரும், புத்த மடாலயத்தில் திரண்டிருந்த சுமார் 270 புத்தபிட்சுகளும் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் களத்திலிருந்து தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.