;
Athirady Tamil News

கோலாலம்பூரில் பெரும் எரிவாயு குழாய் வெடிப்பு: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்!

0

ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தின் போது கோலாலம்பூரில் பெரும் எரிவாயு குழாய் வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கோலாலம்பூரில் வெடிப்பு விபத்து
கோலாலம்பூர் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தின் போது, மலேசியாவின் தேசிய எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது.

இந்த வெடிப்பின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர், அவர்களில் 60 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், வெடிப்பின் காரணமாக எழுந்த தீப்பிழம்புகள் மற்றும் புகை மண்டலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தெரிவதாக உள்ளது.

சுமார் 500 மீட்டர் (1,600 அடி) நீளத்திற்கு எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில தீயணைப்பு அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெட்ரோனாஸ் குழாயின் வால்வு வெற்றிகரமாக மூடப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

குழாய் வெடிப்பே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.