;
Athirady Tamil News

கர்ப்பிணி பாடசாலை மாணவிகளுக்கு நிதிச்சலுகை அறிவித்த ரஷ்ய பிராந்தியம்

0

ரஷ்யாவின் கெமெரோவோ பிராந்தியம் கர்ப்பிணிப் பாடசாலை மாணவிகளுக்கு பணம் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிறப்பு விகிதங்களை அதிகரிக்க முன்னுரிமை
உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, மூன்று ஆண்டுகளில் மோசமடைந்துள்ள மக்கள்தொகை நெருக்கடியை நிவர்த்தி செய்ய, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிறப்பு விகிதங்களை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளார்.

அதன்படி கெமெரோவோ பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள், அங்கு பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு பணம் செலுத்துவார்கள் என்று ரஷ்ய அரசு ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டன.

இது நாட்டின் மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க, கிரெம்ளின் முயற்சியின் இடையே குறைந்தபட்சம் இது மூன்றாவது பிராந்திய முயற்சியாகும்.

பிராந்திய அரசாங்க ஆணையின் கீழ், தகுதியுள்ள பாடசாலை மாணவிகளின் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் (Legal Guardians), ஜனவரி 1ஆம் திகதி வரை குறைந்தபட்சம் 22 வாரங்கள் கர்ப்பமாக இருந்தால் 100,000 ரூபிள் (1,200 டொலர்கள்) ஒருமுறை பணம் பெறுவார்கள் என்று RIA Novosti தெரிவித்துள்ளது.

8 ரஷ்ய பிராந்தியங்கள்

இந்த நிதிச்சலுகை மகப்பேறு மருத்துவமனையில் பதிவுசெய்யப்பட்ட “பொது, தொழில்முறை அல்லது உயர்கல்வி நிறுவனங்களைச்” சேர்ந்த முழுநேர மாணவிகளுக்கும் பொருந்தும். 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கெமரோவோ பகுதி, குறைந்தது 25 ஆண்டுகளாக மக்கள்தொகை சரிவை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், குறைந்தது 8 ரஷ்ய பிராந்தியங்கள் இதுபோன்ற சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இருப்பினும், அவை பாடசாலை வயது சிறுமிகளுக்கு அல்லது பல்கலைக்கழக மாணவிகளுக்கு பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் RIA Novosti கூறியுள்ளது.

ரஷ்யாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.