இலங்கையில் வரவேற்பை பெற்றுள்ள விந்தணு தானம்!

கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஏற்கெனவே ஆறு பெண்களுக்கு உதவியுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.
செவ்வி ஒன்றின் போதே மருத்துவமனை இயக்குநர் இதனஒ தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் மலட்டுத்தன்மையுடன் இருக்கும் தம்பதிகளுக்கு உதவுவதில் இது ஒரு பெரிய படியாகும். சமீபத்தில் திறக்கப்பட்ட விந்தணு வங்கி, ஏற்கெனவே விந்தணு தானத்திற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த முயற்சியின் மூலம் சுமார் 200 மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் குழந்தை பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
விந்தணு வங்கியின் முக்கிய குறிக்கோள், மலட்டுத்தன்மையுடன் போராடும் பெற்றோருக்கு குழந்தைகளைப் பெற உதவுவதாகும்.
அதேவேளை விந்தணுவை தானம் செய்ய விரும்புவோர் பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
விந்தணு தானம் குறித்து மருத்துவமனை தினமும் தொலைபேசி விசாரணைகளைப் பெறுவதாகவும் ஆர்வமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம் என்றும் கூறினார்.